ETV Bharat / state

‘ஊழல் வழக்கில் ஈபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார்’ - புகழேந்தி - ADMK pugazhendi

ஊழல் வழக்கில் ஈபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்

ஊழல் வழக்கில் ஈபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார்

author img

By

Published : Jul 9, 2022, 9:50 AM IST

சென்னை பசுமைவழிச் சாலையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவரை சந்தித்த பின்னர் அவரது ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியுள்ள எடப்பாடி பழனிசாமியின் ஊழல் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டால் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்படுவார். ஜூலை 11ஆம் தேதி காலையில் வரக்கூடிய பொதுக்குழு தொடர்பான வழக்கு எங்களுக்கு சாதகமாகவே அமையும். அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு பொதுக்குழுவில் கலந்து கொள்வதா இல்லையா என்று தெரியவரும்.

ஊழல் வழக்கில் ஈபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார்

நீங்கள் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் பதவி இன்னும் காலாவதியாகவில்லை என கூறியுள்ளார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது. ”நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஓபிஎஸ் சொல்வதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேட்கவே இல்லை" என்றார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்கு; ஈபிஎஸ் தரப்பின் காரசாரமான வாதங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.