அதிமுக பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர், அதிமுக ஒபிஎஸ், ஈபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்து பின்னர் இணைந்தனர். ஆனால் ஆவடியில் மட்டும் இரு அணிகளும் தனித்தனியாகவே செயல்பட்டு வந்தனர். ஆவடி சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான பாண்டியராஜன் ஓபிஎஸ் அணியிலும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் அப்துல்ரஹிம் ஆகியோர் ஈபிஎஸ் அணியிலும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்தனர்.
இரு அணியினருக்கும் இடையே தொடர்ந்து மறைமுக மோதல் தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த அதிமுக இளைஞர் அணி திடீர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பாண்டியராஜனின் ஆதரவாளர் தென்றல்மகி என்பவரை முன்னாள் அமைச்சர் அப்துல்ரஹிமின் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையில் அக்கட்சியின் நிர்வாகி சுல்தான் என்பவர், அமைச்சர் பாண்டியராஜனை பகிரங்கமாக மிரட்டி கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முயன்ற சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பருப்பு, பாமாயில் விநியோகம் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிப்பு