ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் - ஓபிஎஸ்க்கு பதிலடி தந்த ஈபிஎஸ் தரப்பு... - பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் - ஓபிஎஸ்க்கு பதிலடி தந்த இபிஎஸ் தரப்பு...

author img

By

Published : Jun 20, 2022, 2:17 PM IST

Updated : Jun 20, 2022, 2:27 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழுவை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது , "வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனைப்படியே முடிவு செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் திட்டமிட்டப்படி நடைபெறும். பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவார், தீர்மானத்தையும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்" என தெரிவித்தார்.

பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆய்வு நடத்தினர். அதன் பின், வானகரத்தில் நடைபெற்ற ஈபிஎஸ் தரப்பினரின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: பொதுக்குழுவை ஒத்திவைக்க ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம்! - கூட்டம் நடக்குமா? நடக்காதா...தொண்டர்கள் குழப்பம்

Last Updated : Jun 20, 2022, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.