சென்னை: அதிமுகவில் பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு அதிமுக தலைமை அலுவலக சாவியும் எடப்பாடி பழனிசாமியிடம் சென்றுவிட்டது. இதனால் ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. குறிப்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் முறையிடுவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் எடப்படாடி பழனிசாமி திடீரென நேற்று (செப் 19) இரவு 9 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டார். அவருடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்த 3 நாள் பயணத்தில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு இரட்டை இலை சின்னத்தை யாரும் முடக்கா வண்ணம் வலுயுறுத்தப்போவதாக கூறப்படுகிறது. அதே நேரம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து கூட்டணி, கட்சி விவகாரம் குறித்து பேசப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது... உயர் நீதிமன்றத்தில் வழக்கு