ETV Bharat / state

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் ஈபிஎஸ் ஆப்சென்ட்..? - AIADMK

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 60ஆவது குருபூஜையில் கலந்து கொள்வது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் ஈபிஎஸ் ஆப்சென்ட்..?

author img

By

Published : Oct 26, 2022, 12:38 PM IST

சென்னை: இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60வது குருபூஜையை முன்னிட்டு, 30.10.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க,

தலைமைக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி,

கருப்பசாமி பாண்டியன், வி.வி.ராஜன் செல்லப்பா, இசக்கி சுப்பையா, கீர்த்திகா முனியசாமி, முருகையாபாண்டியன், ஜி.பாஸ்கரன், டாக்டர் எம்.மணிகண்டன், முனியசாமி, தச்சை என்.கணேசராஜா, பி.ஆர்.செந்தில்நாதன், சி.கிருஷ்ணமுரளி, ஆர்.கே.ரவிச்சந்திரன் மற்றும் பி.கே.வைரமுத்து ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அதிமுக நிர்வாகிகளும், அதிமுக தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈபிஎஸ் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேவரின் தங்கக்கவசம் - நீதிமன்றத்தில் மல்லுக்கட்டும் அதிமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.