ETV Bharat / state

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: இபிஎஸ், ஓபிஎஸ் மனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலையொட்டி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

admk coordinator election  nomination for admk coordinator election  epd ops nomination for admk coordinator election  அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்  இபிஎஸ் ஓபிஎஸ் இணைந்து மனு தாக்கல்  ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான மனு தாக்கல்
மனு தாக்கல்
author img

By

Published : Dec 4, 2021, 3:52 PM IST

Updated : Dec 4, 2021, 4:08 PM IST

சென்னை: அ.தி.மு.கவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, வரும் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், ஒற்றை வாக்கு வழியே இணைந்தே தேர்வு செய்வர் என கட்சி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல், நேற்று (டிசம்பர். 3) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

இபிஎஸ், ஓபிஎஸ் மனு தாக்கல்

இந்நிலையில் இன்று (டிசம்பர். 4) எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய நிர்வாகிகள் 15 பேர் முன்மொழியவும், 15 பேர் வழி மொழியவும் தேர்தல் ஆணையர்கள் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட இரு தலைவரின் பெயரில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக மறுநாள் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், அந்நேரத்தில் வேறு யாரேனும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால் இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிகழ்வின் போது, அதிமுக நிர்வாகிகள் செம்மலை, கேபி முனுசாமி, வைகை செல்வன், செங்கோட்டையன், ஜெயகுமார் திண்டுக்கல் சீனிவாசன் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சரக்கு வாகன தணிக்கை மூலம் ரூ.5.81 கோடி வரை அபராதம் வசூல் - ஜோதி நிர்மலாசாமி

Last Updated : Dec 4, 2021, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.