ETV Bharat / state

இ - பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன்? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கரோனா தொற்று ஒருவருக்கு உறுதியாகும் பட்சத்தில் அவர்களுடன் பயணித்தவர்களை கண்டறிய உதவியாக இருக்கும் வகையில் மாநிலங்களுக்குடையே மட்டும் தானியங்கி முறையில் இ - பாஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
author img

By

Published : Oct 9, 2020, 7:03 PM IST

கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும், சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி படிப்படியாக பல்வேறு தளர்வுகள் மத்திய - மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இ-பாஸ் ஏதும் தேவையில்லை என அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதனை மீறும் வகையில் வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களும், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை ஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இந்த முறை சட்டவிரோதம் என சென்னையைச் சேர்ந்த எழில்நதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வெளிநாட்டில் இருந்தோ, வெளிமாநிலத்தில் இருந்தோ தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை.

கரோனா பரவும் சூழலில் சம்மந்தப்பட்டவருக்கு தொற்று உறுதியாகும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் உடன் பயணித்தவர்களை கண்டறிய உதவியாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே தானியங்கி முறையில் இ-பாஸ் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த வாதத்தை தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு இ - பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன் என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.