ETV Bharat / state

சட்ட விரோத குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு - அபராதம் விதிக்க உத்தரவு - Environmental damage

சட்ட விரோத குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபராதம் விதிக்க உத்தரவு
அபராதம் விதிக்க உத்தரவு
author img

By

Published : Sep 21, 2021, 8:09 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய்துறை அலுவலர்கள், அரசுக்கு துரோகம் செய்துவிட்டனர்.

2005ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக குவாரிகள் நடத்தப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அபராதம் விதிக்க உத்தரவு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அடங்கிய அமர்வில் இன்று (செப். 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் முத்துக்குமார், "சட்ட விரோத குவாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கனிமவள சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் குவாரிகளை நடத்தியவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த நடவடிக்கைகள் மட்டும் போதாது எனவும் சட்ட விரோத குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு அபராதம் வசூலிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை கணக்கீடு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தார்

இதையும் படிங்க: நியாய விலைக்கடைகளில் மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.