ETV Bharat / state

பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கிலப் பயிற்சி: இன்னசென்ட் திவ்யா - இன்னசென்ட் திவ்யா

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கிலப் பயிற்சி

author img

By

Published : Mar 17, 2022, 12:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் வகையிலும், அவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்தவும் நான் முதல்வன் திட்டத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் உடன் இணைந்து ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு திறன்களை மேம்படுத்தி வேலை வாய்ப்பினை பெருக்குவதற்காக நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கவுன்சில் உடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மார்ச் 8ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

அந்த திட்டத்தின்படி அறிவுசார் இலக்கு மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறும் வகையில் இளைஞர் சமுதாயத்திற்கு திறன் பயிற்சியளித்து, உலகமெங்கும் தடையின்றி செல்ல ஆங்கில மொழியினை கற்றறியவும் கல்வி மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்திடவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இன்னசென்ட் திவ்யா பேட்டி

ஆங்கிலப் பயிற்சி

இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னசன்ட் திவ்யா கூறும்போது, "பிரிட்டிஷ் கவுன்சில் புகழ்பெற்ற நிறுவனம். சென்னையில் உள்ள அலுவலகத்துடன் இணைந்து ஆங்கிலம் திறனை வளர்க்க உள்ளோம். ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் கனவாக இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் போல் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மாணவர்களின் வயதிற்கு ஏற்ப பள்ளி அளவில் பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் வயதிற்கு ஏற்ப பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கவும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பட்டப்படிப்பினை முடித்துவிட்டு, செல்லும் போது வேலையை பெறும் வகையில் ஆங்கில அறிவையும், நேர்காணல் எதிர்க்கொள்ளும் வகையிலும் பயிற்சி அளிக்கப்படும்.

பிரிட்டிஷ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அளிக்கும் தொழில் திறன்களையும் கண்டறிந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இதற்கான பாடத்திட்டம் வடிவமைத்து, பள்ளிக்கல்வி, உயர்கல்விப் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எச்சிஎல் டெக்பீ என்ற திட்டத்தில் கல்விக் கட்டணத்தை மானியமாகவும், உதவித்தொகையும் அளித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவும், தொழில்முனைவோராக தேவையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது" என்றார்.

ஜனகா புஷ்பாநாதன் பேட்டி

ஒப்பந்தம்

பிரிட்டிஷ் கவுன்சில் தென் இந்தியாவின் இயக்குநர் ஜனகா புஷ்பாநாதன் கூறியதாவது, "நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அனைத்து இளைஞர்களுக்கும் ஆங்கில அறிவை அளிப்பதற்கான பயிற்சியும், வேலை வாய்ப்பினை பெறுவதற்கு தேவையான ஆங்கில அறிவு பயிற்சியும், சென்னையில் உள்ள ஆங்கிலம் கற்பிக்கும் மையத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில அறிவை எவ்வாறு வழங்குவது குறித்தும் திட்டமிட்டுள்ளோம். பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கலாச்சாரத்தை இந்தியாவில் உள்ளவர்களுக்கும், இந்தியக் கலச்சாரத்தை பிரிட்டிஷ் நாட்டில் உள்ளவர்களுக்கும் பரிமாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தற்கொலை தீர்வல்ல - மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.