ETV Bharat / state

பொறியியல் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறும் - மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் - Admission Committee

'இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்' என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பாெறியியல் மாணவர் சேர்க்கை செயலளார் புருஷோத்தமன்

author img

By

Published : Aug 4, 2022, 8:46 PM IST

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு புதியதாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள முறையை, தனியார் கல்லூரிகளுக்கு விளக்குவதற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் தனியார் கல்லூரிகளில் இருந்து மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வின் புதிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு பாெறியியல் மாணவர் சேர்க்கை செயலளார் புருஷோத்தமன் கூறியதாவது, ”ஆண்டுதோறும் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் பலர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பொறியியல் இடங்களில் சேர்வதில்லை. இதனால், பல கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் விடுவதால் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இதனைத்தவிர்க்கும் பொருட்டு நடப்பாண்டு முதல் புதிய முறையினை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் இடங்களில் ஒரு வார காலத்திற்குள் சேரவில்லை எனில், அந்த இடம் காலி இடமாக கருதப்பட்டு, தரவரிசையில் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மாணவருக்கு அந்த இடம் ஒதுக்கப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகமாகிறது.

தமிழ்நாடு பாெறியியல் மாணவர் சேர்க்கைக்குழு செயலளார் புருஷோத்தமன் பேட்டி

மாணவர்கள் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேரலாம் அல்லது இந்தக்கல்லூரியில் சேர விரும்புகிறேன், வேறு கல்லூரியில் இடம் கிடைக்குமா? எனக்காத்திருக்கிறேன் எனவும் தற்காலிக ஒதுக்கீட்டின்போது பதிவு செய்யலாம். கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு கடிதமும், வேறு கல்லூரியில் சேர விரும்புவதாக கூறும் மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு கடிதமும் அளிக்கப்படும்.

கல்லூரியில் மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் சேர வேண்டும். தற்காலிக ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் உதவி மையங்களில் சென்று கட்டணத்தைச்செலுத்தி இடத்தை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர முடியும்.

ஆன்லைன் வழியில் நடைபெறும் கலந்தாய்வு ஒளிவுமறைவின்றி முழுவதும் வெளிப்படையாகவே நடத்தப்படும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள் தேர்வுசெய்யும் இடங்களும் வெளியிடப்படும்”, எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விளையாட்டு போட்டிகளுக்கு புதிய இணையத்தளம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.