ETV Bharat / state

முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியாளர் கைது!

சென்னை: திருமணமான முன்னாள் காதலியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பொறியாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியாளர் கைது

author img

By

Published : Dec 11, 2020, 8:42 PM IST

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சென்னையிலுள்ள விப்ரோ என்ற மென்பொருள் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பூந்தமல்லியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது உடன் படித்த மாணவியை காதலித்துள்ளார். மாணவியும் மகேஸ்வரனை காதலித்திருக்கிறார். இதன் பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கல்லூரியை விட்டு இருவருமே பிரிந்து சென்றுள்ளனர்.

இதன் பின்பு கல்லூரி வாழ்க்கையை முடித்த மாணவிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே அந்தப் பெண் கணவரை விட்டு பிரிந்துள்ளார். இதன் பின்னர் சமூக வலைதளங்கள் வழியாக மகேஸ்வரன் அந்த பெண்ணை தொடர்புகொண்டு பேசி, பழகி வந்துள்ளார்.

அந்தப் பெண்ணும் அவருடன் நன்றாக பேசி பழகியுள்ளார். பின்னர், அந்தப் பெண் கணவரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழ்ந்து வருவதை தெரிந்துகொண்ட மகேஸ்வரன், பெண்ணிடம் சற்று அதிகமாகவே நெருக்கம் காட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனியாக வாழ்ந்து வருவதால் தனது ஆசைக்கு பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண் தரப்பிலிருந்து மறுக்கப்படவே எப்படியாவது அந்த பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைக்க திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, அந்த பெண்ணின் பெயரிலேயே சமூகவலைதளங்களில் போலியான கணக்குகளை உருவாக்கி அந்த கணக்குகளில் மூலம், தான் அந்த பெண்ணுடன் கல்லூரி நாள்களில் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து, அந்தப் பெண் தவறானவர் என்பது போன்று சித்தரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சென்னை மத்திய குற்றப்பிரிவில் மகேஸ்வரன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மகேஸ்வரனை நேரில் அழைத்து எச்சரித்துள்ளனர்.

காவல் துறையினரின் எச்சரிக்கையை மதிக்காமல் மீண்டும் அந்தப் பெண்ணுக்கு அவர் தொடர்ந்து ஆபாசமான குறுஞ்செய்திகள், ஆபாசமாக பேசி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து, காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆண் நண்பர்களுடன் பழகும்போது பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், முக்கியமாக புகைப்படங்களை பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.