சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (BVSc & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பிடெக்) (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் அக்டோபர் 8 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தகுதிபெற்றவர்களின் பட்டியல்

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (கலையியல் பிரிவு -BVSc AH (Academic)) பிரிவில் 22 ஆயிரத்து 240 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 21 ஆயிரத்து 899 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (தொழிற்கல்வி BVSc AH (Academic) பிரிவில் 248 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 245 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
பி.டெக். (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு) ஆகியவற்றிக்கு நான்காயிரத்து 410 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் நான்காயிரத்து 315 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
கலந்தாய்வு குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும்

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணபித்த 26 ஆயிரத்து 898 மாணவர்களில் 26 ஆயிரத்து 459 தகுதிபெற்றுள்ளனர். தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று (பிப்ரவரி 2) வெளியிட்டது.
தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமும் நடத்தப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்படும் என மாணவர் சேர்க்கைக்குழுச் செயலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளன்று அஜித்தின் 'வலிமை' திரையரங்குகளில்...