ETV Bharat / state

பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!

author img

By

Published : Jul 31, 2020, 7:08 AM IST

சென்னை: பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும், 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளும் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

Eleventh standard and HSE plus 2 arrears exam result to be out today morning
பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. இதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ஆம் தேதி மறு தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வு எழுதியவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுந்தகவலாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் படித்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை, அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆலைப் பணிகளுக்கு பள்ளி மாணவிகள் ஈடுபடுத்தப்படுகின்றனரா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.