ETV Bharat / state

வேலைக்கு வராததற்கு காரணம் கேட்டதால் மின்வாரிய ஊழியர் தற்கொலை! - தற்கொலை

வேலைக்கு வராத மின்வாரிய ஊழியரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அளிக்கப்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 11, 2022, 5:35 PM IST

சென்னை: நம்மாழ்வார்பேட்டை பகுதியிலுள்ள மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் சாமுவேல் (57) என்பவர் வயர் மேனாக பணியாற்றி வந்தார். இவர் பல நாள்களாக மது குடித்துக் கொண்டு வேலைக்குச் செல்லாத காரணத்தினால் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சாமுவேல், நேற்று (டிச.11) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த தலைமைச் செயலக காலனி காவல் துறையினர், சாமுவேல் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.