ETV Bharat / state

‘மின்வெட்டுக்கு காரணம் அதிமுக ஆட்சிதான்’- அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை: அதிமுக ஆட்சியில் மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாதது தான் மின்வெட்டுக்கு காரணம் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
author img

By

Published : Jun 17, 2021, 3:16 PM IST

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின் வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 677 கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாத நிறுவனங்கள், வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது.

மின்சார பராமரிப்பு பணிகள் வரும் ஜுன் 19ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்குள் போர்கால அடிப்படையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மின்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும், ”தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்கு, அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததும், உபகரணங்கள் வாங்காமல் இருந்ததே காரணம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது மாவட்ட வாரியாக மின் பணிகளை சீர் செய்யும் பணிகள் தொடங்க இருக்கிறது. இவை வரும் ஜுன் 19ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பராமரிப்புப் பணிகள் நடைபெறும் வரை மின் துண்டிப்பு, பகுதி பகுதியாக செய்யப்படும், இது குறித்து அப்பகுதி மக்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும். இந்த மின்வெட்டு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும்.

மேலும், மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: 'சொன்னதை செய்த முதலமைச்சர்' - தங்கச் சங்கிலி வழங்கிய பெண்ணிற்கு வேலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.