சென்னை: சமயபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று மின்சார வயரின் மீது உரசியதில் இரண்டு மின்கம்பங்கள் டேங்கர் லாரி மீது சாய்ந்தது. டேங்கர் லாரியின் மீது மின்சார வயர் விழுந்ததில் தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது.
இதனைக்கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை விட்டு அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
உரிய நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: பரளியாற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி பலி