ETV Bharat / state

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு - தமிழ்நாடு செய்திகள்

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை
கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை
author img

By

Published : Dec 23, 2022, 1:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவிக்காலம் 2023 அன்று முடிவடைய உள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்து நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் இன்னும் வழங்கவில்லை. இதன் காரணமாக, ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

மேலும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், 2018 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தேர்தல் முதற்கட்டத்தில் (1st Phase) 18,468 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான (Primary Cooperative Societies) தேர்தல் 12.03.2018 முதல் 11.08.2018 வரை நடைபெற்றன.

அவற்றில் முதல் நிலையில் (1st Stage) 03.04.2018 அன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, 02.04.2023 அன்று 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ள 4,684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை, தற்போது தேர்தல் ஆணையம் நடத்த உத்தேசித்துள்ளது.

எனவே, பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மேலே குறிப்பிட்டவாறு 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள், இவற்றுடன் சேர்த்து, இதர வகையிலும் ஏப்ரல் 2023 இல் தேர்தல் நடத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி விவரங்களை தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப ஏதுவாக 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதனுடன் சேர்த்து புதியதாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் இதர வகையில் எப்ரல் 2023 இல் தேர்தல் நடத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்களின் விவரங்கள் சரகம் வாரியாக வருகின்ற 28 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுத்தம் செய்ய வந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற அதிகாரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.