தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவு எட்ட வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்தக் கோரிக்கையை பரிசீலித்து உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று தேர்தல் நடக்கும் பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அளித்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து வெளியான அரசாணையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தேர்தல் நடக்காத 10 மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை