சென்னை மாவட்டத்தில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில்போட்டியிடுவதற்காக மொத்தம் 177 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வட சென்னை தொகுதியைபொறுத்தவரை தாக்கல் செய்யப்பட்ட 56 வேட்புமனுக்களில் 24 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 32 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மத்திய சென்னை தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 52 மனுக்களில் 39 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
69 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தென் சென்னை மக்களவைத் தொகுதியில் 42 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 27
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மாவட்டத்தில் மொத்தம் 105 பேர் களத்தில் உள்ளனர்.