சென்னை பழைய பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ஏழுமலை. முதியவரான இவரது மகன் நித்தியானந்தம், அப்பகுதியில் பூமிக்கடியில் கேபிள் பதிக்கும் பணியில் பல்லாவரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஹரிஹரன் என்பவருடன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பொறியாளர் ஹரிஹரன் தன்னை நித்தியானந்தம் தாக்கியதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நித்தியானந்தம் தலைமறைவானதால், அவரது தந்தை ஏழுமலையிடம் காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
பொறியாளரை தாக்கியதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், நித்தியானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பல்லாவரம் காவல் நிலையத்தில் நேற்று (ஜன.6) நடந்த விசாரணையின் போது ஏழுமலை மயங்கி விழுந்தார். காவல் துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஏழுமலையின் உயிரிழப்பு குறித்து உயர் அலுவலர்கள் விசாரணை நடத்த, அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு