சென்னை: இராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்(65). இன்று காலை திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட இவர், வீடு திரும்புவதற்காக எண்ணூரில் இருந்து திருவான்மியூர் செல்லும் 1C மாநகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் பேருந்து நிலையத்தில் இறங்குவதற்காக தயாரான இவர், மாநகர போக்குவரத்து ஓட்டுநர் திடீரென்று பிரேக் பிடித்ததில் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்த போக்குவரத்து காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், முதியவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச்சம்பவம் குறித்து திருவொற்ரியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பண விவகாரத்தில் தாய், மகனை வெட்டிய கட்டட மேஸ்திரி கைது!