தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 80 பேர் கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 13,475 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 14, 842 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 66,329ஆக உள்ளது. 9,142 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 9 லட்சத்து 52 ஆயிரத்து 186 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
தற்போது வரை 1,00,668 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 4,086 பேருக்கு தொற்று உறுதியானது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உயிரைப் பறிக்கும் கரோனா - ஒரே நாளில் 2,624 பேர் பலி!