ETV Bharat / state

Engineering Courses:பொறியியல் படிப்பு நேரடி கலந்தாய்வு - கல்வியாளர் நெடுஞ்செழியன் வலியுறுத்தல் - Tamil Nadu Engineering Admissions 2023

பொறியியல் படிப்புக்கு நேரடி கலந்தாய்வு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 20, 2023, 10:18 PM IST

பொறியியல் படிப்பு நேரடி கலந்தாய்வு கல்வியாளர் நெடுஞ்செழியன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான 'ஒற்றை சாளர கலந்தாய்வு' முறையை நேரடியாக நடத்த வேண்டும் (Tamil Nadu Engineering Admissions 2023) எனவும், மாணவர் விருப்பப்பதிவினை சரியாக செய்யாவிட்டால் அவர் பாதிக்கப்பட்டு, அடுத்தச்சுற்றில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கும் நிலைமை உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், மாணவர்களை நேரடியாக அழைத்து அவர்கள் இருக்கும் மாவட்டதிலேயே ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களில் விருப்பப்பதிவினை சரியாக செய்ய முடியாவிட்டால், டெக்னோகிராட்ஸ் இந்தியா கல்லூரி பைண்டர் (Technocrats India College Finder) நிறுவனத்தின் சென்னை, மதுரை அலுவலகத்தினை தொடர்பு கொண்டால் ஏழை மாணவர் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் இலவசமாகவும், மற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 கட்டணத்தில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டது. மேலும், மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 9ஆம் தேதி வரையில் வாய்ப்பு வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது மாணவர்கள் குறைகளை ஜூன் 30ஆம் தேதி வரையில் தெரிவித்தனர்.

ஒற்றைச் சாளர முறையில் 1,57,378 இடங்கள்: தற்பொழுது மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத்தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கலந்தாய்வு சுற்றுக்கான விரிவான கால அட்டவணையினை www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 430 கல்லூரிகளில் உள்ள 2,14,960 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,57,378 கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 11,804 இடங்களும் , தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3,143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் நேரடி கலந்தாய்வு முறையை கொண்டு வருக: இந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வில் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்வதில் உள்ள சிரமங்களைத் தவிர்ப்பதற்காக மீண்டும் ஏற்கனவே இருந்தது போல, ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வினை மாணவர்களை நேரடியாக அழைத்து நடத்த வேண்டும் என பெற்றோர்கள் தரப்பிலும் கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கலந்தாய்வின்போது, தனியார் கல்லூரிகளில் மாணவர்களை அழைத்து பதிவு செய்துவிட்டு, பின்னர் அவர்களே அந்தக் கல்லூரியை கலந்தாய்வின்போது தேர்வு செய்யும் நிலையும் உள்ளது.

கலந்தாய்வில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் இன்று (ஜூலை 20) ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், ''மாணவர்கள் ஆன்லைன் மூலம் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்யப் பதிவிடுவது உகந்தது கிடையாது. ஐஐடி போன்ற நிறுவனங்கள் செய்வதால் நாங்களும் செய்கிறோம் எனக் கூறுகின்றனர். பெரிய கல்லூரிகள் இதனால் பயன்பெறுகின்றன. ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வுதான் சிறப்பானது. மாணவர்கள் தரவரிசைப்பட்டியலின்படி நேரடியாக பார்த்து கல்லூரியில் காலியாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து வந்தனர். தற்பொழுது எந்தக் கல்லூரி வேண்டும் என்பதை கூறுமாறு தெரிவிக்கிறோம். மாணவர்களுக்கு சாய்ஸ் பில்லிங் குறித்து விழிப்புணர்வு கிடையாது. அதற்கான விழிப்புணர்வும் நாம் அளிக்கவில்லை.

தமிழ்நாட்டை பின்பற்றிய மகாராஷ்டிராவில் நேரடி கலந்தாய்வு: தமிழ்நாட்டில் 430 கல்லூரிகள் உள்ளன. அதில் தவறான தகவலை அளித்தால் அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும் விரும்பும் கல்லூரியும், பாடப்பிரிவும் கிடைக்காது. மேலும், தமிழ்நாட்டில் ஒரு கடவுளின் பெயரில் பல கல்லூரிகள் இருக்கின்றன. அதில் எந்தக் கல்லூரி என்பதை சரியாக பார்த்துப் போட வேண்டும் என்பதும், எந்தக் கல்லூரியில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் என்ற தகவலும் தெரியாது.

தமிழ்நாட்டை பார்த்து மகாராஷ்டிராவில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தினர். அங்கு 50 இடங்களில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முதலில் ஒரு இடத்தை எடுத்தப்பின்னர் தான் வேறு இடத்தைத் தேர்வு செய்ய முடியும்.

7.5% இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் அரசே முழு கட்டணத்தையும் செலுத்துவதால் அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று தனியார் கல்லூரியில் சேர்த்து விடுகின்றனர். மேலும், மாணவர்களிடம் கூடுதலாக கட்டணத்தை கட்ட வேண்டும் எனக் கூறுவதுடன், சமூக இடைவெளியும் அங்கும் ஏற்படுகிறது. பணக்கார மற்றும் ஏழை மாணவர்கள் என்ற நிலை பள்ளியில் இருந்தது போல், கல்லூரியிலும் தற்பொழுது ஏற்பட்டு வருகிறது. இது எதிர்காலத்திற்கு நல்லது கிடையாது.

கடந்த 30 ஆண்டிற்கு முன்னர் ஏழை மற்றும் பணக்கார மாணவர்கள் ஒரே இடத்தில் தான் படித்தார்கள். சமூக நீதி பேசும்பாேது மாணவர்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு தான் சிறப்பாக இருக்கும். அதில் எந்த ஏமாற்றமும் இருக்காது. அவர்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.

நேரடி கலந்தாய்வுக்கு 2 நாள் போதுமானது: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி 23 ஆண்டுகளாக ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு நேரடியாக நடைபெற்றது. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் கலந்தாய்வினை தொழில் நுட்பக் கல்வி இயக்கம் நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திடம் கூறினால் 2 நாட்களில் கலந்தாய்வினை நேரடியாக நடத்த முடியும்.

ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு அவசியம் தேவை: தமிழ்நாடு அரசு உடனடியாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வினை கொண்டு வர வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு ஒற்றைச் சாளர முறையில் நடத்த வேண்டும். முதலில் கொண்டு வரும்போது, தகவல் தொழில்நுட்பம் இந்தளவிற்கு கிடையாது.

தற்பொழுது தகவல் தொழில்நுட்பம் அதிகரித்துள்ளதால், மாவட்ட அளவில் கலந்தாய்வினை நேரடியாக நடத்தலாம். மதிப்பெண்களை பெறுவதற்கு 12 ஆண்டுகள் கஷ்டப்பட்ட மாணவர்களை மீண்டும் கஷ்டப்படுத்துகிறோம்.

ரூ.1000 கட்டணத்தில் மாணவர்கள் பயனடையலாம்: தற்போதைய நிலையில் மாணவர்களை தகவல் உதவி மையங்களிலும் வைத்து நடத்தலாம். ஏற்கனவே, நுழைவுத் தேர்வு நடக்கும்போது, அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக சென்று பார்வையிட்டது போல், அண்ணா பல்கலைக்கழகம் பணியாளர்களை அனுப்பி வைத்து உதவிட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களில் விருப்பப்பதிவினை சரியாக செய்ய முடியாவிட்டால், டெக்னோகராட்ஸ் இந்தியா காலேஜ் பைண்டர் (technocrats india college finder) நிறுவனத்தின் சென்னை, மதுரை அலுவலகத்தினை தொடர்புகொண்டால் ஏழை மாணவர் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் இலவசமாகவும், மற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: NEET UG 2023 Counselling: MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.