ETV Bharat / state

பள்ளி வளாகத்தில் அநாவசியமாக நுழைந்தால் கடும் நடவடிக்கை பாயும்! - அநாவசியமாக நுழைந்தால் கடும் நடவடிக்கை

சென்னை: ஊரடங்கின்போது பள்ளி வளாகத்தில் பொதுமக்களோ, மாணவர்களோ அநாவசியமாக நுழையக்கூடாது என கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளி வளாகம்
பள்ளி வளாகம்
author img

By

Published : May 26, 2021, 1:26 PM IST

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ’அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் பள்ளி வளாகத்தினுள் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் இருக்கக்கூடாது. பள்ளிகளின் மைதானங்களில் கிரிகெட், வாலிபால், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அலுவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குழுவாக பள்ளி மைதானங்களில் விளையாடுவது கரோனா தொற்று பரவ வழி வகுக்கும். பள்ளிக்காவலர் உள்ள பள்ளிகளில் அக்காவலர்கள் பள்ளியை மூட வேண்டும். காவலர் இல்லாத பள்ளிகளில், பள்ளியின் முகப்பு கதவை பள்ளி வளாகத்தில் யாரும் நுழையாத வகையில் எப்போதும் பூட்டியே வைத்திருக்க வேண்டும்.

பள்ளியின் அறிவிப்பு பலகையில், அனைவரும் பார்க்கும் வகையில், ’மைதானத்தில் விளையாடவோ, பள்ளிக்குள் நுழையவோ அனுமதி இல்லை’ என எழுதி வைக்கவேண்டும். ஊரின் முக்கிய நபர்களுக்கு தகவல் தெரிவித்து, பள்ளி வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க கேட்டுக் கொள்ள வேண்டும்.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை

பள்ளியின் வளாகத்தில் மாணவர்கள் விளையாடுவது தெரிய வந்தால் கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும். பள்ளி வளாகத்தினுள் அநாவசியமான மக்கள் நடமாட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியரே முழுப் பொறுப்பாவார்’ எனக் குறிப்பிடப்படுள்ளது.

இதையும் படிங்க:ஊரடங்கு விதிமீறல்: சாலையில் சுற்றித் திரிந்தவர்களின் 2,352 வாகனங்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.