ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவன்பாளையத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட கால்நடை சிகிச்சைக்கான கிளை நிலையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொடர்ந்து பெய்துவரும் மழை குறித்து வானிலை மையத்தின் தகவல்களை அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவெடுப்பார்கள். நேரடியாக பள்ளிக்கல்வித்துறை மூலம் விடுமுறை அளிக்கப்படாது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரின் பணிகள் இந்தியாவே வியக்கும் வண்ணம் உள்ளது. சீன அதிபர் பிரதமர் மோடி சந்திப்பின் போது ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்புகளை இரு தலைவர்களுமே பாராட்டினர் இதைவிட சான்று தேவையில்லை.
மண்புழு என்பது விவசாயிகளை வாழவைப்பது. அதுபோல முதலமைச்சர் உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் கால்நடை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.