ETV Bharat / state

ஐஐடி நுழைவாயில் எப்போது திறக்கப்படும்? பேரவையில் செங்கோட்டையன் பதில் - தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: மூடப்பட்டுள்ள ஐஐடியின் நுழைவாயிலை முதலமைச்சருடன் கலந்துபேசி மத்திய அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan
sengottaiyan
author img

By

Published : Jan 9, 2020, 12:39 PM IST

சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய வேளச்சேரி திமுக எம்எல்ஏ வாகை. சந்திரசேகர், 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ஐஐடியின் பிரதான வாயிலை தவிர்த்து மூன்று நுழைவாயில்கள் இருப்பதாகவும், அதில் வேளச்சேரி மக்கள் அதிகம் பயன்படுத்தும் காந்தி சாலை நுழைவாயில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதனால் அப்பகுதி மக்கள் மூன்று கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ள சூழல் ஏற்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய வாகை. சந்திரசேகர், ஆதி திராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பாதையைத் திறக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித் துறை அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசின் உத்தரவைப் பெற்று மூடப்பட்ட நுழைவாயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.

Intro:Body:
சென்னை ஐ ஐ டியில் மூடப்பட்ட நுழைவாயிலை முதல்வருடன் பேசி மத்திய அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய வேளச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை.சந்திரசேகர், 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ஐ ஐ டி யில் பிரதான வாயிலை தவிர்த்து மூன்று நுழைவாயிகள் இருப்பதாகவும் அதில் வேளச்சேரி மக்கள் பயன்படுத்தும் காந்தி சாலை நுழைவாயில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அப்பகுதி ஆதி திராவிடர் மக்கள் வாழும் பகுதி என்பதால் அவர்கள் மிகுந்த வேதனைக் குள்ளாகி வருவதாகவும் அதனை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகை.சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசின் உத்தரவை பெற்று மூடப்பட்ட நுழைவாயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.