ETV Bharat / state

"விடியா அரசில் தலைத்தூக்கிய கள்ளச்சாராய கலாச்சாரம்" விழுப்புரம் சம்பவத்தை தொடர்ந்து ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மூன்று பேர் பலியான நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : May 14, 2023, 12:15 PM IST

Updated : May 14, 2023, 1:56 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாரய விற்பனை படுஜோராக நடந்து வந்துள்ளது.இங்கு கள்ளச்சாரயம் குடித்த பலரும் வயிற்று வலியால் துடித்திருக்கின்றனர். மேலும் சிலர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சிலர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த பிறரையும் மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர்.

  • மரக்காணம் அருகே
    கள்ளச்சாராயம் அருந்தியதால் திரு.சுரேஷ்,திரு.சங்கர்,திரு.தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும் ,மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய…

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும், இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில்,"மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது.

மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.

கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது. இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன.அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Villupuram Toxic Liquor: விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்!

Last Updated : May 14, 2023, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.