ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது - எடப்பாடி பழனிசாமி - ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Edappadi
Edappadi
author img

By

Published : Jun 18, 2021, 11:13 AM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டது திமுகவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மூத்த நிர்வாகியுமான டி.ஆர் . பாலுதான்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் டி.ஆர் . பாலு, இத்திட்டத்தை தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து 2010இல் ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றார். இதை டி.ஆர். பாலுவே தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அது ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கின்றன.

திமுகதான் அதைக் கொண்டுவந்தது என்பதை அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல, ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆய்வுப் பணி தொடங்க நான்கு ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2011 ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது திமுக அரசுதான்.

அதுவும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது, அவரது முன்னிலையில்தான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, ஒருபோதும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கவில்லை. அதனை முழுமையாகக் கடைப்பிடித்துவந்தோம் என்பதையும் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று “தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், காவிரி டெல்டா மாவட்டங்கள், சில டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

தொடர்ந்து 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதிமுக அரசு, வேளாண் பெருமக்களின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, தகுந்த வழிமுறைகளை ஆராய்ந்து, இந்தச் சட்டத்தினை மிக நுணுக்கமாகத் தயாரித்து, “பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனிச் சட்டத்தினை" சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அதனை நிறைவேற்றியதன் மூலம் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாத்துள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

எங்களது ஆட்சியின்போது புதிதாக நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக ஓஎன்ஜிசி, வேதந்தா நிறுவனங்கள் ஒன்றிய அரசிடமிருந்து குறிப்பு விதிமுறைகளைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு 2019 ஆகஸ்ட் 9 அன்று ஒரு உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து எண்ணெய், இயற்கை எரிவாயு கிணறுகளினால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வுசெய்து அதன் ஆய்வு அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் வரை எந்தவிதமான ஆய்வுப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று நான் முதலமைச்சராக இருந்தபோது உத்தரவிட்டிருந்தேன்.

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறும் பொருட்டு பொதுமக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என 2020 ஜனவரி 16 அன்று திருத்தப்பட்ட அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும், காவிரி டெல்டா பகுதியினைப் பாதுகாக்கும்பொருட்டும், பொதுமக்களின் கருத்துக் கேட்புக்குப் பின்னரே இதுபோன்ற திட்டங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என பாரதப் பிரதமருக்கு அப்போதே கடிதம் எழுதினேன்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 17), வெளிவந்த ஒரு செய்தியில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது.

அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனமோ அல்லது இதுபோன்ற இதர எண்ணெய் நிறுவனங்களோ, ஏதேனும் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கவில்லையோ அதுபோல், முதலமைச்சர் அவர்களும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு எதிரான ஓஎன்ஜிசின் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு, அரசின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.