சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமி, மாரடைப்பு காரணமாக இன்று (செப். 1) காலமானார்.
இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் வகையில், தற்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
![eps condolence edappadi palanisamy condolences to o panneerselvam wife dead edappadi palanisamy condolences o panneerselvam wife dead condolences to o panneerselvam wife dead vijayalakshmi vijayalakshmi dead o panneerselvam wife vijayalakshmi dead ஓபிஎஸ் மனைவி மறைவு ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் இபிஎஸ் இரங்கல் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி இரங்கல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-epscondolence-7209106_01092021113726_0109f_1630476446_109.jpg)
இரங்கல் அறிக்கை
அதில், “எனது அன்புக்குரிய அருமை சகோதரரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு, வார்த்தைகளில் விவரிக்க இயலாத துயரமும், வேதனையும் அடைகிறேன்.
அன்பும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த பேரிழப்பை எப்படி தாங்குவார் என்று எண்ணி கண்ணீர் வடிக்கிறேன். இயன்ற வகைகளில் எல்லாம், எல்லோருக்கும் உதவும் நல் உள்ளம் கொண்ட அன்பு சகோதரருக்கு இப்படி ஒரு துயரம் நேர்ந்திருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
![eps condolence edappadi palanisamy condolences to o panneerselvam wife dead edappadi palanisamy condolences o panneerselvam wife dead condolences to o panneerselvam wife dead vijayalakshmi vijayalakshmi dead o panneerselvam wife vijayalakshmi dead ஓபிஎஸ் மனைவி மறைவு ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் இபிஎஸ் இரங்கல் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி இரங்கல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-epscondolence-7209106_01092021113726_0109f_1630476446_390.jpg)
இறைவா, ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியைக் கொடு என்று பிரார்த்திக்கிறேன். மறைந்த விஜயலட்சுமியை, அவருடைய இல்லத்தில் நான் சந்தித்தபோதெல்லாம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும், உயர்ந்த உள்ளத்துடனும் என்னை உபசரித்ததை நினைத்து, அந்த நல்ல இதயம் நம்மை விட்டுப் பிரிந்ததே என்று வேதனைப்படுகிறேன்.
ஒ. பன்னீர்செல்வம்- ப. விஜயலட்சுமி ஆகியோரின் அன்புப் பிள்ளைகளான, தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், கழக நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவருமான ப. ரவீந்திரநாத் எம்பி, வி.ப. ஜெயபிரதீப் உள்ளிட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிகழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.