நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு குறித்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது கனவை நனவாக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர், 'ஆளுநர் காலதாமதம் செய்ததால் அதனை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இந்த அரசியல் எடுபடாது. ஜெயலலிதா ஆட்சியில் அரசு நினைத்ததை நிறைவேற்றியே தீரும்' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!