சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், அவர் உடலானது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல நடிகர்கள், அரசியல் தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் சென்னை வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
-
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 28, 2023தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 28, 2023
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மறைந்த விஜயகாந்த் சிறந்த நடிகர். திரையுலகம் மற்றும் அரசியலிலும் தனக்கொரு தனி முத்திரையைப் பதித்தவர் ஆவார். அவர் கடந்த 2005-இல் மாநாடு நடத்தி, தேமுதிகவை அரசியல் கட்சியாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து விருதாச்சலம், ரிஷிவந்தியத்தில் நின்று வெற்றி பெற்றார். மேலும், அவர் அதிமுக கூட்டணியில் எதிர்கட்சித் தலைவராக இருந்து சிறப்பாக செயலபட்டார். 150க்கும் மேற்பட்ட படத்தில் நடித்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் சங்கத்தை திறம்பட நடத்தினார். தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்ட விஜயகாந்த் இறந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருந்தினேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நாயகன் விஜயகாந்த் செய்த சாதனைகள்..!