ETV Bharat / state

பொதுப்பணித்துறைக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சோதனை! - ED raid

ED raid at Purasaiwakkam: சென்னை புரசைவாக்கம் பிரக்லின் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுப்பணித்துறைக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சோதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 10:17 AM IST

சென்னை: புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 3ஆம் தேதி பொதுப்பணித் துறைக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அமித் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர் பொதுப்பணித் துறையில் அரசு கட்டிடப் பணிகளுக்கு மின்சாதனப் பொருட்களை சப்ளை செய்யும் முகவராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக இவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே சோதனை செய்து சீல் வைக்கப்பட்ட அறைகள் மீண்டும் திறக்கப்பட்டு, சோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விமான நிலைய பெண் ஊழியர்கள் வீடுகளில் சோதனை.. ரூ.5 கோடி விலையிலான தங்கம் பறிமுதல் - 4 பேர் அதிரடி கைது!

இது மட்டுமின்றி புரசைவாக்கம் பகுதிகளில், மேலும் சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடைபெறுகிறதா அல்லது புதிய வழக்கு தொடர்பான சோதனை நடத்தப்படுகிறதா என்பது குறித்த தகவல் இன்னும் அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

ஏழு வாகனங்களில் சென்றுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: தென்காசியில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.