ETV Bharat / state

விபத்து எதிரொலி - குயின்ஸ்லேண்ட் பூங்காவை மூட காவல் துறை உத்தரவு

திருவள்ளூர் : ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தையடுத்து சென்னை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்குப் பூங்காவை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

கீழே சரியும் ராட்டினம்
author img

By

Published : Jun 21, 2019, 12:37 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியார் பொழுதுபோக்குப் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும், “ப்ரீ பால் டவர்” என்னும் விளையாட்டும் உண்டு. நீண்ட உயரத்திற்கு ராட்சத இரும்புத்தூண் அமைக்கப்பட்டு அதன் மத்தியில் இரும்புத் தொட்டில் போல் ராட்டினம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் அமர்ந்தவுடன் மேலே சென்று, வேகமாக கீழே இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இங்குள்ள ராட்டினத்தில் சுற்றுலாப் பயணிகள் ஏறி உள்ளனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்த ராட்டினத்தின் இரும்புக் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன.

உயரமான பகுதியில் சென்றபோது இரும்புக் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும். கீழ் பகுதியில் இருந்தபோது, ராட்டினத்தின் ஒரு பகுதி இரும்புக் கம்பிகள் அறுந்து விழுந்ததால் லேசான காயங்களுடன் அதில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

ராட்டினக் கயிறு அறுந்த காட்சிகளை அங்கு சென்ற ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது குறித்து நசரத்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் இன்று குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்குப் பூங்காவை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பூங்காவை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே பூங்காவை இயக்க வேண்டும் என கூறப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை குயின்ஸ்லேண்டை மூடி வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கீழே சரியும் ராட்டினம்

இது குறித்து அங்கு வந்த பொதுமக்கள் கூறுகையில், மிகவும் பிரபலமான இந்தப் பொழுதுபோக்குப் பூங்காவில் கோடை விடுமுறைக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் அதிகளவில் வருவதால் இந்தப் பொழுதுபோக்குப் பூங்காவில் உள்ள இயந்திரங்களை, அதன் உரிமையாளர்கள் சரியாக பரிசோதிப்பது இல்லை.

இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இனியும் அரசு அலுவலர்கள் சற்றும் தாமதிக்காமல் பொழுதுபோக்குப் பூங்காவில் உள்ள இயந்திரங்களின் தரம், உறுதித் தன்மையை ஆராய வேண்டும் என்றனர்.

Intro:பூவிருந்தவல்லி அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.ராட்டினம் அறுந்து விழும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் விளைவாக தற்காலிகமாக மூட காவல்துறை உத்தரவு

Body:பூவிருந்தவல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குயின்லாண்ட் எனும்
பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.இந்த பூங்காவிற்கு தினந்தோறும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளது. இந்த நிலையில் இந்த பொழுதுபோக்கு பூங்காவில் "ப்ரீ பால் டவர்" எனும் விளையாட்டு உள்ளது நீண்ட உயரத்திற்கு ராட்சத இரும்புத்தூண் அமைக்கப்பட்டு அதன் இரண்டு பகுதிகளிலும் இரும்பு தொட்டில் போல் அமைக்கப்பட்டு
பொதுமக்கள் அமர்ந்து கொண்டு சுமார் 200 அடிக்கு மேலே சென்று வேகமாக கீழே இறங்கும் வகையில் உள்ளது. இந்த ராட்டினத்தில் அங்கு வந்த பொதுமக்கள் ஏறி உள்ளனர். இதில் பொதுமக்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ராட்டினத்தின் இரும்பு வயர்கள் அறுந்து கீழே விழுந்தது இந்த காட்சிகள் அங்கு சுற்றுலா சென்ற ஒருவர் படம்பிடித்துள்ளார். அதில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது மேலும் உயரமான பகுதியில் இந்த இரும்பு வயர்கள் அறுந்து விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் கீழ் பகுதிக்கு வந்தவுடன் ராட்டினத்தின் ஒரு பகுதி இரும்பு வயர்கள் அறுந்து விழுந்ததால் லேசான காயங்களுடன் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இதுகுறித்து அங்கு வந்த பொதுமக்கள் கூறுகையில் : மிகவும் பிரபலமான இந்த பொழுதுபோக்கு பூங்காவில் கோடை விடுமுறைக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர் மேலும் பொதுமக்கள் அதிகளவில் வருவதால் இந்த பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள எந்திரங்களின் அதன் உரிமையாளர்கள் சரியாக பரிசோதிப்பது இல்லை மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அடிக்கடி சென்று எந்திரங்களின் தரம் குறித்து சோதனை செய்வது இல்லை இதனால் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது எனவே இனியும் அரசு அதிகாரிகள் தாமதிக்காமல் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள எந்திரங்களில் தரம் மற்றும் அதன் உறுதி தன்மையை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தையடுத்து அந்த விளையாட்டு உபகரணம் மட்டும் பயன்படுத்தாமல் மற்ற உபகரணங்கள் வழக்கம் போல் பதட்டமாக இயங்கி வந்ததுConclusion:இந்நிலையில்
கடந்த செவ்வாய்யன்று FREE FALL என்ற ராட்சத ராண்டினத்தில் 12 பேர் அமர்ந்து விளையாடி கொண்டு இருந்த போது ராட்டினம் அறுந்து விழுந்தது. இதில் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதனை அடுத்து குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்கள், ராட்டினங்களை இயக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.மீண்டும் இயக்க அங்குள்ள உபகரணங்களுக்கு stability certificate பெற வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.