ETV Bharat / state

இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி - துரைமுருகன் - duraimurugan

சென்னை: அனைத்து துறைகளிலும் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்து வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

duraimurugan
author img

By

Published : Jul 15, 2019, 12:17 PM IST

Updated : Jul 15, 2019, 1:41 PM IST

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் அவர் கூறுகையில்,"தபால் துறை தேர்வு தமிழில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இனி அத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். கலெக்டர் வேலைக்கே தமிழில் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளபோது சாதராண தபால்காரன் வேலைக்கு தமிழ் தெரிந்திருக்க கூடாது இந்தி தான் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பத்திரிகையை திறந்தால் தினம் ஒரு துறையில் இந்தி திணிக்கப்படும் செய்தி வெளியாகிறது.ஒரே நாடு, ஒரே ஆளுமை, ஒரே கட்சி, ஒரே மொழி என்பதே இந்த பா.ஜ.க. அரசின் நித்திய கடமையாக உள்ளது.

இதைப்பற்றி எங்கள் உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பான உரையை ஆற்றினார். இந்தி திணிப்பை எதிர்ப்பது தான் எங்களுடைய கருத்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். எனவே இந்த விவகாரத்தில் நம் இருகட்சிகளுக்கும் கருத்து பேதமை இல்லை ஆகையால் இது குறித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவர்கள் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் கொண்டுவரப்படாது என்றும் பதிலளிக்கவில்லை. மாறாக நீங்கள் வெளிநடப்பு செய்ய முடிவு எடுத்துவிட்டீர்கள் அதற்காக காரணம் தேடுகின்றீர்கள் என்று எங்கள் கருத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முதலமைச்சர் கூறினார்.

மேலும் பொய் பரப்புரையின் மூலம் விளம்பரம் தேடும் கொச்சை எண்ணம் எங்களுக்கு இல்லை. அதனால் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். முதலில் நாம் தீர்மானம் நிறைவேற்றி பின் அது நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும். அந்த மன்றத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில்லை. நம் மன்றத்தில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். இவர்கள் இந்தியை திணிப்பார்கள். இந்தியை வாயிலும் திணிப்பார்கள்"

மத்திய அரசு இந்தியை திணித்த போதெல்லாம் தமிழ்நாடு எதிர்த்து வந்துள்ளது. ஆனால் அதை மீறியும் மத்திய அரசு இந்தி திணிப்பை கையிலெடுத்துள்ளது. தற்போது அதிமுக-திமுக இடையே கருத்து வேறுபாடு இல்லாத போது, இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வராதது ஏன் என கேள்வி கேட்டோம். ஆனால் அதற்கு அரசு சார்பில் உரிய பதிலளிக்கவில்லை.

இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி - துரைமுருகன்

இது எனக்கு முதன்முறையல்ல. இந்தி திணிப்புக்கு எதிராக நான் மாணவர் காலத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் ஆளாக கைதாகியுள்ளேன்.தற்போது மத்திய அரசு அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. இதை தடுக்கும் விதத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார்.

Intro:Body:

Duraimurugan byte after exit from Tn assembly

Conclusion:
Last Updated : Jul 15, 2019, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.