ETV Bharat / state

வெயில் காரணமாக முன்கூட்டியே நடத்தப்படும் முழு ஆண்டுத் தேர்வுகள்!

author img

By

Published : Apr 4, 2023, 11:58 AM IST

வெயில் காரணமாக பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இந்த மாதம் 11-ஆம் தேதி துவங்கி ஒரு வாரத்தில் முடிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Due to the heat, the final school year exams will be held early!
வெயில் காரணமாக முன்கூட்டியே நடத்தப்படும் பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள்!

சென்னை: தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. மேலும், தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கமானது அதிகரித்துக் காணப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் தொடங்கும் வெயிலின் தாக்கம் ஆகஸ்ட் மாதம் வரை தொடரும். ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கமானது பிப்ரவரி தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது, இதனால் அந்த மாத இறுதியிலேயே வெயிலின் அளவு 90 டிகிரியை கடந்து விட்டது. மேலும் தென்காசி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது.

மேலும், கோடை வெயில் மே மாதம் தான் உச்சம் பெறும். ஆனால் தற்போது மக்கள் மே மாத வெயிலை ஏப்ரலிலேயே உணர்வதால், மே மாதம் கத்தரி வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேலூர், சேலம், திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

இதன் காரணமாக, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு, இந்த மாதம் 11-ஆம் தேதியிலிருந்து துவங்கி ஒரு வாரத்தில் முடிப்பதற்குப் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வானது, ஏப்ரல் 24-ஆம் தேதி துவங்கி, மாத இறுதிவரை தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே, திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேதியில் இந்த தேர்வுகள் துவங்கி, ஒரு வாரத்தில் முடிவடையும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அட்டவணையை வெளியிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்வுகள் துவங்கி, 24-ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. மேலும், சென்னை மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்கூட்டியே மாணவர்களுக்குத் தேர்வினை நடத்தி முடித்து கோடை விடுமுறை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியின் கடந்தாண்டு வசூல்? - நிலுவைத் தொகை வசூலிக்க புதிய திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.