ETV Bharat / state

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் - காமராஜர் சாலை

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் நாளை(ஆக.15) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருக்கும் விழாவ முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
author img

By

Published : Aug 14, 2021, 7:02 AM IST

சென்னை: நாளை சென்னை ஜார்ஜ் கோட்டையில் 75 ஆவது சுதந்திர விழா நடைபெறுவதை முன்னிட்டு, காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப்பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப் பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை, கொடிமர சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனை செல்ல வேண்டும்.

பாரி முனையில் இருந்து ராஜாஜி சாலை தலைமைச்செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், பாரிமுனை வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு முத்துசாமி சாலை முத்துசாமி பாலம் அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

அண்ணா சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள், முத்துசாமி பாலம் முத்துசாமி சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு வடக்குக் கோட்டை பக்க சாலை வழியாகச் செல்லலாம். முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமர சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

அனுமதிக்கப்பட்டவர்களுக்கான வழி

சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் 8:30 மணி வரை ராஜாஜி சாலை வழியாகச் சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த வேண்டும்

சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை அண்ணா சாலை ரயில் நிலைய சாலை வழியாக கோட்டையை அடைய வேண்டும்.

நீல மற்றும் பிங்க் அனுமதி அட்டை வைத்திருப்போர் 8:30 வரை ராஜாஜி சாலை போர் நினைவுச் சின்னம் கொடிமர சாலை முத்துசாமி பாலம் முத்துசாமி ரோடு வடக்குக் கோட்டை பக்க சாலை பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலகம் வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களைத் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வாகன நிறுத்தத்தில் நிறுத்தவேண்டும்.

நீலம் மற்றும் பிங்க் வண்ண அட்டை வைத்திருப்போர் 8:30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை அண்ணாசாலை முத்துசாமி பாலம் கோடைபக்க சாலை சந்திப்பு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமை செயலகத்திற்க்கு எதிரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீரர்களின் சிலைகளுக்கு மரியாதை -முதலமைச்சர் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.