ETV Bharat / state

போதையாக மாறிய பிரசவ வலி மாத்திரை: மூன்றுபேர் கைது - Chennai MGR Nagar latest News

சென்னை: எம்ஜிஆர் நகரில் போதைக்காக பெண்களுக்கான பிரசவ வலிகுறைப்பு மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

druggist seller
author img

By

Published : Sep 13, 2019, 11:21 AM IST

சென்னை எம் ஜி ஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் ரகசியமாக போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த பாலாஜி(31) மற்றும் மணிகண்டன் (19) ஆகிய இருவரும் மறைமுகமாக போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது.

இந்நிலையில், காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மது போதையை விட மகப்பேறு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நைட்ரோ விட் மற்றும் நைட்ரோ பிளஸ் ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் போதை கிடைக்கிறது. இதனால், எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இதனை விற்பனை செய்தோம் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், இந்த வகை மாத்திரைகள் தி.நகர் சீனிவாச ரெட்டி தெருவில் அமைந்துள்ள பாலாஜி மருந்தகத்தில் இருந்து ஒரு மாத்திரை அட்டை 150 ரூபாய் வீதம் வாங்கிய மாத்திரைகளை ஒரு மாத்திரை 70 ரூபாய் என்ற வீதத்தில் விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக பாலாஜி மருந்தக உரிமையாளர் ரவிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஒரு அட்டை மாத்திரையின் விலை 46 ரூபாய் என்றும் லாப நோக்கத்திற்காக ஒரு அட்டையை 150 ரூபாய்க்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மகப்பேறு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் வலி மாத்திரை 150 அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Intro:Body:சென்னை எம் ஜி ஆர் நகரில் போதைக்காக பிரசவ வலி குறைப்பு மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது.*

எம் ஜி ஆர் நகர் பகுதியில் அதிக அளவில் டாஸ்மாக் கடைகளில் இரண்டு ரகசியமாக போதை மாத்திரை விற்பனை செய்வதாக எம் ஜி ஆர் நகர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணமாகவே இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (31) மற்றும் அதே பகுதியில் அழகு தம்பி தெருவை சேர்ந்த அவரது நண்பர் மணிகண்டன்(19) ஆகிய 2 பேரும் மறைமுகமாக போதை மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் போலீசார் பாலாஜி மற்றும் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மது போதையை விட மகப்பேறு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நைட்ரோ விட் மற்றும் நைட்ரோ பிளஸ் ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் போதை கிடைக்கின்றது.

இதனால் நாங்கள் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள பல டாஸ்மார்க் கடைகளில் மது குடிக்க வருபவர்களிடம் விற்பனை செய்து இருப்பது செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் இந்த வகை மாத்திரைகளை தி.நகர் சீனிவாச ரெட்டி தெருவில் அமைந்துள்ள பாலாஜி மருந்தகத்தில் இருந்து ஒரு மாத்திரை அட்டை 150 ரூபாய் விகிதத்தில் வாங்கியதாகவும் அதேபோல் அந்த மாத்திரைகளை எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் ஒரு மாத்திரை 70 ரூபாய் என்ற வீதத்தில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ந்து போலீசார் பாலாஜி மருந்தக உரிமையாளர் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஒரு அட்டை மாத்திரையின் விலை 46 ரூபாய் எனவும் சிறிது லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு அட்டையை 150 ரூபாய்க்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தை விற்பனை செய்தது சட்டப்படி குற்றம் என்னும் காரணத்தினால் மருந்தகத்தின் உரிமையாளர் ரவிக்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மகப்பேறு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் வலிக்கு மாத்திரை 150 அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.