சென்னை ஆர்.கே. நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு போதைப் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மது போதைப்பொருள்களின் தாக்கத்தால் விபத்துகளில் சிக்கியும் உடல் நலிந்தும் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துவருவதாகக் கூறினார்.
மேலும், சிகரெட், புகையிலை, போதை பாக்கு, கஞ்சா ஆகியவற்றுக்கு இளைஞர்கள் அடிமையாகிவிடக்கூடாது என்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகாமலும் தவறான பாதைக்குச் செல்லாமலும் விழிப்புணர்வுடன் இந்த பருவத்தை கடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் இவ்வாறு இருப்பதினால் பல்வேறு குற்றச் சம்பவங்களும் தடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க : கூவத்தில் ஆண் சடலம் மீட்பு - சந்தேக மரணமாக வழக்குப்பதிவு!