ETV Bharat / state

டி.ஆர்.ஐ(DRI) சோதனையில் 20.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்! - டி ஆர் ஐ அதிகாரிகள்

சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெவ்வேறு 3 நடவடிக்கைகளில் சுமார் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெவ்வேறு நடவடிக்கையில் சிக்கிய ரூ. 12.50 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

author img

By

Published : Aug 2, 2023, 7:12 AM IST

சென்னை: இலங்கையிலிருந்து ராமநாதபுரத்தின் வடக்குக் கடற்கரையான தங்கச்சிமடம் வழியாக வெளிநாட்டு தங்கம் மீன்பிடிப் படகில் கடத்தப்படுவதாக டி.ஆர்.ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தீவிர கண்காணிப்பில் அவர்கள் ஈடுபட்ட போது, தங்கச்சிமடத்தின் வடக்குக் கடற்கரை அருகே 4 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில் 5.37 கோடி ரூபாய் மதிப்புள்ள, 9.063 கிலோ கிராம் எடையுள்ள வெளிநாட்டு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஜூலை 31 அன்று இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளுடன் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபட்டோரை கைது செய்த அதே நாளில், அதாவது ஜூலை 31 அன்று, குறிப்பிட்ட உளவுத்துறை தகவல் அடிப்படையில், டி.ஆர்.ஐ அதிகாரிகள் கொண்ட மற்றொரு குழு, ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒரு விமானத்தை சோதனை செய்தனர்.

இதையும் படிங்க: ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடரும் - தமிழக காவல்துறை டிஜிபி சபதம்; என்கவுன்ட்டருக்குப்பின் பேட்டி!

அதில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்ததில் சுமார் 3.17 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5.17 கிலோ வெளிநாட்டு தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  • சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம், ரூ.12.5 கோடி மதிப்புள்ள சுமார் 20.5 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தது https://t.co/XmDAs43g2a pic.twitter.com/ROVbpa3jj0

    — PIB in Tamil Nadu (@pibchennai) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நடவடிக்கையில், டி.ஆர்.ஐ அதிகாரிகள் குழு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே சந்தேகம் படும்படியான 6 பேரை பிடித்து அவர்களிடம் சோதனை செய்தது. அப்போது அவர்களிடம் இருந்து பசை வடிவத்தில் சுமார் ரூ.3.8 கோடி மதிப்புள்ள 6.275 கிலோ கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் தற்கொலை செய்த கணவரின் உடலை தமிழகம் கொண்டு வர மனு! இறப்பதற்கு முன் வெளியிட்ட பதற வைக்கும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.