சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத்தலைவராக டாக்டர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.பி. தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மஞ்சித் சிங் நய்யர், சுதிர் லோதா, டாக்டர் எல். டான் பாஸ்கோ உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் (ஜுன் 29) ஆம் தேதி திருத்தியமைத்து, தலைவராக பீட்டர் அல்போன்ஸை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்