ETV Bharat / state

மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து - Aarvee Associates Madurai Metro Rail Project

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

dpr for madurai metro rail project
dpr for madurai metro rail project
author img

By

Published : Mar 29, 2023, 10:34 PM IST

சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் என்னும் வெற்றிகர திட்டத்தை தொடர்ந்து மதுரை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நேற்று (மார்ச் 28) வழங்கியது.

இதற்கான கூட்டம் இன்று (மார்ச் 29) சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டங்கள்) த. அர்ச்சுனன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் போது திட்ட இயக்குநர், இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாள் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு) ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் & கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பிரிதிநிதிகள் மற்றும் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். விரைவில் மதுரையில் பங்குதாரர்கள் கூட்டம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், தலைமையில் நடைபெறவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மெட்ரோ ரயில் திட்டத்தை மதுரை, கோவை நகரங்களுக்கு விரிவு படுத்துவது குறித்து அறிவித்திருந்தார். அப்போது, மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கிறது. அதனடிப்படையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும் மெட்ரோ சாலை அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்.. பட்ஜெட்டில் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.