ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் எழுதும் பொதுத் தேர்வுக்கான சலுகை பட்டியல் வெளியீடு! - physically challenged student's board exam concession list

சென்னை: 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் பட்டியலை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம்
DPI
author img

By

Published : Dec 15, 2019, 5:00 PM IST

அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைப் பட்டியிலில் கூறப்பட்டுள்ளதாவது,

'கண் பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக எழுதுபவரை நியமித்துக் கொள்ளலாம். காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றியோருக்கு இரு மொழிப் பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப்பாடம் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும்.

டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் கோளாறு உள்ளவர்களுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி, கிளார்க் அட்டவணை பயன்படுத்த அனுமதி, கேள்வித்தாளை படித்துக்காட்ட அல்லது சொல்வதை எழுத ஆசிரியரை நியமிக்க அனுமதி (இரண்டில் ஏதேனும் ஒரு சலுகை அவரின் கோரிக்கைபடி), ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து தவிர்ப்பு வழங்குதல், மொழி அல்லாத பிற பாடங்களை திருத்தும்போது எழுத்து பிழைக்கென மதிப்பெண் குறைக்காமல் பாடப் பொருளை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பெண் அளித்தல், பள்ளியில் முறையாக பயின்றோ அல்லது பள்ளியில் முறையாக பயிலாமல் தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்றோ தனித் தேர்வராக பொதுத் தேர்வு எழுத அனுமதித்தல் ஆகியவை வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு சலுகை பெறும் மாணவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கேட்கலாம் என அதில்' கூறப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையை பெறுவதற்கு முறையான ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அரசுத் தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

Intro:
10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வில்
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை Body:
10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வில்
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை

சென்னை,
10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் பட்டியலை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைப் பட்டியிலில் கூறப்பட்டுள்ளதாவது,

கண் பார்வையற்றோருக்கு தேர்வெழுத சொல்வதை எழுதுபவரை நியமனம் செய்துக் கொள்ளலாம்.

காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோருக்கு இரு மொழிப் பாடங்களில் ஏதேனும்
ஒரு மொழிப்பாடம் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும்.

எதிர்பாராத விபத்துக்களால் உடல் ஊனமுற்று தேர்வு எழுத இயலாதோர் வாயு போன்ற நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எதிர்பாராத விபத்தினால் கைமுறிவு ஏற்பட்டோருக்கும் தேர்வெழுத சொல்வதை எழுதுபவர் நியமனம் கொள்ளலாம்.

மனநலம் குன்றியோருக்கு இருமொழிப் பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப் பாடம் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படுவதுடன், தேர்வெழுத சொல்வதை எழுதுபவரையும் நியமனம் செய்யப்படும்.

டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளவர்களுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி, கிளார்க் அட்டவணை பயன்படுத்த அனுமதி, கேள்வித்தாளை படித்துக்காட்ட அல்லது செல்வதை எழுத ஆசிரியரை நியமிக்க அனுமதி (இரண்டில் ஏதேனும் ஒரு சலுகை அவரின் கோரிகைபடி), ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து தவிர்ப்பு வழங்குதல், மொழி அல்லாத பிற பாடங்களை திருத்தும் போது எழுத்து பிழைக்கென மதிப்பெண் குறைக்காமல் பாடப் பொருளை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பெண் அளித்தல், பள்ளியில் முறையாக பயின்றோ அல்லது பள்ளியில் முறையாக பயிலாமல் தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்ற தனித் தேர்வராக பொதுத் தேர்வு எழுத
அனுமதித்தல் ஆகியவை வழங்கப்படும்.

நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி, கிளார்க் அட்டவணை பயன்படுத்த அனுமதி, கேள்வித்தாளை படித்துக்காட்டஅல்லது செல்வதை எழுத ஆசிரியரை நியமிக்க அனுமதி (இரண்டில் ஏதேனும் ஒரு சலுகை அவரின் கோரிகை படி), ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதிலிருயது தவிர்ப்பு வழங்குதல், மொழி அல்லாத பிற பாடங்களை திருத்தும் போது எழுத்து பிழைக்கென மதிப்பெண் குறைக்காமல் பாடப் பொருளை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பெண் அளித்தல், . பள்ளியில் முறையாக பயின்றோ அல்லது பள்ளியில் முறையாக
பயிலாமல் தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்ற தனித் தேர்வராக பொதுத் தேர்வு எழுத அனுமதித்தல், கணினி மற்றும் வரைபடம் பயன்படுத்த அனுமதித்தல் போன்றவை வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு சலுகை பெறும் மாணவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கேட்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகையை பெறுவதற்கு முறையான ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அரசுத் தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.