ETV Bharat / state

தமிழ்நாட்டில் பிஎப் 7 வைரஸ் தாக்குதலை எதிர் கொள்ளத் தயார் - சென்னை மருத்துவர்கள் - பிஎப் 7 வைரஸ் தாக்குதலை எதிர் கொள்ளத் தயார்

கரோனா வைரஸ் பிஎப் 7 தமிழ்நாட்டில் பரவினாலும் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான படுக்கை வசதிகளும், மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் கையிருப்பில் உள்ளது எனவும், பொது மக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என மருத்துவக் கல்வி இயக்குனர் (பொ) சாந்திமலர் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 31, 2022, 3:05 PM IST

சென்னை: பிஎப் 7 தொற்றால் தாக்கினால் பாதிப்புகள் அதிகளவில் இல்லாமல் சாதாரண நிலையில் தான் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கிறது எனவும், 40 நாட்களில் இதன் பரவல் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவத்துறை பேராசிரியர் பரந்தாமன் தெரிவித்தார்.

பி.எ.5 என்கின்ற வைரஸின் உள் உருமாற்றம் அடைந்தது பி.எப்.7 ஆகும். இந்த வைரஸ் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி பல உயிர்கள் பிரிய காரணமாக உள்ளது.எனவே மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனா, தைவான், ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா போன்ற ஐந்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 100 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த 24ஆம் தேதி முதல் தமிழ்நாட்டிற்கு விமானத்தின் மூலம் வந்த 39 ஆயிரத்து 351 பேரில் 2 சதவீதம் அடிப்படையில் 889 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் கரோனா தொற்று பரவினால் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்களையும் தமிழ்நாட்டில் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர் கூறும்போது, “தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனைகளில் 2020ஆம் ஆண்டு வந்த கரோனா முதல் அலையின் போது 2 லட்சத்து 66 ஆயிரத்து 23 பேருக்கும், 2021ஆம் ஆண்டு வந்த கரோனா 2ஆம் அலையின் போது 2 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும், 2022ஆம் ஆண்டில் 88 ஆயிரம் பேருக்கும் கரோனா சிகிச்சை அளித்துள்ளோம்.

பிஎப்7 வந்துக் கொண்டு இருக்கிறது என கூறுகின்றனர். இதற்காக ஏற்கனவே 8 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து நோயாளிகள் வரும் போது கூடுதலாக 48 ஆயிரம் படுக்கைகள் 36 மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 69 இணைப்பு பெற்ற மருத்துவமனைகளில் 55 ஆயிரத்து 98 படுக்கைகள் உள்ளன. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்ஜிசன் வழங்கும் டேங்குகள் 122 உள்ளன.

இதன் மூலம் 911 கிலோ லிட்டர் ஆக்ஜிசன் வழங்க முடியும். இரண்டாம் அலையின் போது ஆக்ஜிசன் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிப்புகள் பெரியளவில் இருந்தது. எனவே அந்த நேரத்தில் ஆக்ஜிசன் உற்பத்தி நிலையங்கள் 89 தயார் நிலையில் உள்ளது. ஆக்ஜிசன் கான்சிடேட்டர் , சிலிண்டர் போன்றவையும் தயார் நிலையில் உள்ளது. 2022ஆம் ஆண்டில் கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து போது, நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் அதிகளவில் தேவைப்பட்டது.

அப்போது வாங்கிப் பயன்படுத்தப்பட்ட வென்டிலேட்டர், சிபாப்,பைபாப் முறையில் ஆக்ஜிசன் அளிப்பதற்கான மருத்துவக்கருவிகளும் தயார் நிலையில் உள்ளது. பல்ஸ் ஆக்சி மீட்டர் 85 ஆயிரம் தயார் நிலையில் உள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு 95 இயந்திரங்கள் 69 இடங்களில் தயார் நிலையில் உள்ளது.

பிஎப் 7 வைரஸ் சீனா, தைவான், ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா அதிகமாக பரவி வருவதாக கூறுகின்றனர். அதன் பரவும் வேகம் வேகம் ஒருவருக்கு வந்தால் 16 பேருக்கு நோய் பரவும் என கணித்துள்ளனர். ஒரு நோயாளி தும்பினாலும் அருகில் உள்ள 16 பேருக்கு பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே முதல் அலையின் போது பின்பற்றப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டின் போது பாெது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

தொற்று பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும், ஒமைக்கரான் வகையில் இருந்த பாதிப்பை விட குறைவாகத்தான் இருப்பதாக தரவுகளில் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.அதனால் நாேய் தொற்று பாதிப்பு வராது எனவும் இருக்கத்தேவையில்லை. அதே நேரத்தில் பாதுகாப்பாக இருப்பதுடன், நோய் தொற்று வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும் போது தொற்று இல்லை என காண்பித்தாலும், மரபணு மாற்றம் அடைந்துள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். பிஎப் 7 வைரஸ் பாதிப்பு 29ஆம் தேதி வரையில் வரவில்லை. வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதாலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மத்திய , மாநில அரசுகள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிழக்கிய ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருபவர்களையும் 72 மணி நேரம் முன்னர் நெகடிவ் சான்றிதழ் பெற்று வர வேண்டும் எனவும் உத்தரவிட்டு, பின்பற்றப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 6 மாதத்திற்குத் தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்துக் கொள்ள கூறப்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. பிபிகிட் தேவையான அளவிற்கும் கையிருப்பு உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டதால் அனைவரும் ஏற்கனவே நன்றாக பயிற்சி பெற்றுள்ளனர்.

மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர்

இருந்தாலும், மீண்டும் அனைவருக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், இணை நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சிகிச்சை முறையில் மாற்றம் தேவையா என்பது குறித்தும் பயிற்சி அளித்துள்ளோம். தற்போது படுக்கை வசதிகள் அதிகளவில் உள்ளது. தேவைப்படும் போது கோவிட் கேர் சென்டர் போன்றவை திறக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. மக்கள் பாதுகாப்புடன் இருந்தால் இது போன்றவை தேவைப்படாது” என்றார்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவத்துறை பேராசிரியர் பரந்தாமன் கூறும்போது, “ஒமைக்கரான் வைரசின் உரு மாற்றம் அடைந்தது பிஎப்7. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மைக் கொண்டது. ஆனால் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் தீவிர பாதிப்பு என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த நோய் வந்தார் மூலம் 15 பேர் வரை பரவும் என கூறுகின்றனர். இந்த வைரஸ் தாக்கினால் தடுப்பூசி போடாதவர்கள், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, இருதய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

இளைஞர்களுக்கும், தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் தொற்று வந்தால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். கராேனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்தால் பரவலை தவிர்க்க முடியும். நோய் தொற்று பரவல் அதிகமாக இருக்காது. அதனை முன்கூட்டியே கண்டுப்பிடித்தால் தடுக்க முடியும். பிஎப் 7 வைரஸ் வேகமாக பரவும் போது 40 நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே பரவலை கட்டுப்படுத்தினாலும் குறைத்து விடாலம். நோய் தொற்று எந்தளவிற்கு வந்தாலும் சிகிச்சை அளிக்க முடியும்.

கரோனா தொற்றில் டெல்டா வந்த போது சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகள் இல்லாமல் இருந்தால் பாதிப்புகளும், இறப்பும் இருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பின் போது இறப்புகள் இருந்தாலும், பாதிப்புகளும் இருந்தது.
ஆர்என்ஏ வைரஸ் உருமாற்றம் அடைந்துக் கொண்டே வரும். எனவே தொடர்ந்து உருமாற்றம் அடைந்து சாதரண சளி காய்ச்சல் போன்று மாறிவிடும். இந்த வைரஸ் பாதிப்பால் இழப்புகள் அதிகம் வராது.

பேராசிரியர் பரந்தாமன்

நோய் தாக்கம் பரவல் அதிகமாக இருந்தாலும் சிகிச்சை அளிக்க முடியும். கரோனா வைரஸ் தொற்று வந்தால் பாதிப்புகள் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே அதற்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் வாங்கி வைத்துள்ளோம். சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளும், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.

அகில இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் சி.என்.ராஜா கூறும்போது, “2019ஆம் ஆண்டில் இருந்து கரோனா தொற்று பரவலால் பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் நிலையில், தலையில் இடி விழுந்தது போல் சீனாவில் பிஎப்7 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான தனிமனித இடைவெளி, சுகாதாரம் முக்கியம். அரசும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களையும் பரிசோதனை செய்து வருகின்றனர். 6 பேருக்கு வந்துள்ளது என தெரிவிக்கின்றனர். பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள். அரசு மற்றும் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அகில இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் சி.என்.ராஜா

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொருளாளர் இளங்கோவன் கூறும்போது, “கரோனா பாதுகாப்பிற்கான முககவசம், சானிடைசர், பிபிகிட் போன்றவைகளுக்கான விற்பனை தமிழ்நாட்டில் அதிகரிக்கவில்லை. மேலும் தேவையான அளவிற்கு மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களிடம் திமுக தவறு செய்யக்கூடாது' - வி.பி.துரைசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.