நடிகர் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளையொட்டி ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் டாக்டர் ஜெ. ஜெயகிருஷ்ணன் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ஜே. ஜெயகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிட்லபாக்கம் ஏரி, பெரும்பாக்கம் ஏரி போன்ற ஏரிகளை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தூர்வாரியுள்ளோம். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரம் மரக்கன்றுகளை நட உள்ளோம்.
ரஜினிகாந்த் விரைவில் கட்சித் தொடங்குவார் என எதிர்பார்த்திருக்கின்றோம். அதற்கான ஆயத்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்தை விமர்சிப்பவர்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை" என்றார்.
இதையும் படிங்க: நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுக் கொடி ஏற்றுங்கள்: சீமானின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!