ETV Bharat / state

இருட்டுக்குள் ஆடிய கார்... எம்.பி பாஸில் இளம்பெண்ணுடன் பல் மருத்துவர் குதுகலம் - Doctor arrested for using fake DMP MP pass

பள்ளிக்கரனையில் திமுக பெண் எம்பியின் பெயரில் போலியான கார் பாஸ் வைத்துக் கொண்டு, தோழியுடன் மகிழ்ச்சியாக இருந்த பல் மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

யில் திமுக பெண் எம்பியின் பெயரில் போலியான கார் பாஸ் வைத்துக்
DMP MP pass
author img

By

Published : Jun 14, 2021, 2:33 AM IST

சென்னை: பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இரு புறமும் சதுப்பு நில பகுதிகள் இருக்கும். அங்கு சாலையை ஒட்டி புதர் போல் செடிகள் வளர்ந்து, மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படும்.

இதனால், வாகனங்களை நிறுத்தி சிலர் சதுப்பு நிலத்தில் இருக்கும் பறவைகளை கண்டு களிப்பர். அதேசமயம், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ஆடிய சொகுசு கார்

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி இரவு 9 மணியளவில், புதரை ஒட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வழியாக பள்ளிகரணை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் சென்ற போது சொகுசு கார் ஆடிக் கொண்டிருந்தது.

அரை குறை ஆடையுடன் ஓடிய இளம்பெண்

இதனால், சந்தேகமடைந்த அவர் கார் அருகில் சென்று பார்த்த போது காரில் ஒரு நபர் இளம்பெண்ணுடன் அரை குறை ஆடைகளோடு உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

DMP MP pass
பல் மருத்துவர் கைது

காவல் துறையினரை கண்டதும் இளம் பெண் அரை குறை ஆடையுடன் காரில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். அந்த இருசக்கர வாகனத்தில் பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் சென்னை திமுக எம்பி போலி பாஸ்

காரில் இருந்த இளைஞரை விசாரித்த போது, தென் சென்னை திமுக எம்பிக்கு தான் நெருக்கமானவர் என்று கூறி எம்பியின் பாஸ் ஒன்றையும் காட்டியுள்ளார்.இதனால் சற்று யோசித்த போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

ஷாக்கான தமிழச்சி தங்கபாண்டியன்

இருந்தாலும் ஆய்வாளருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனை தொடர்பு கொண்டு இளைஞர் பற்றி கேட்டதற்கு அவர் தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

தேடி கம்பி எண்ண வைத்த போலீஸ்

இதையடுத்து, ஆய்வாளரை ஏமாற்றிவிட்டு சென்ற அந்த இளைஞரை வீடு தேடி சென்று கைது செய்து போலியாக அச்சிட்டு வைத்திருந்த எம்பி பாஸையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் மடிப்பாக்கத்தை சேர்ந்த ஷியாம் கண்ணா(27) என்பதும், அவர் ஒரு பல் மருத்துவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

போலி பாஸில் குதுகலம்

மேலும், போலியாக திமுக எம்பியின் பாஸை ராஜகோபாலன் என்ற மருத்துவரிடம் இருந்து வாங்கியதாகவும், காரில் இருந்த பெண் தனது பெண் தோழி என்றும், ஊரடங்கு காலம் உள்ளிட்ட பல நேரங்களில் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.

தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த பள்ளிகரணை காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இது போன்று ஒரு எம்பி.,யின் அனுமதியில்லாமல் போலியாக பாஸ் எப்படி தயாரிக்கப்பட்டது, இதில் தொடர்புடைய நபர்கள் யார் யார்? பாஸ் வழங்கிய ராஜகோபாலன் யார் என்று பள்ளிக்கரணை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உயர் அலுவலர்களின் மெயில் ஐடி ஹேக்? ஒன்றிய அரசின் எச்சரிக்கையால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.