ETV Bharat / state

நியாய விலைக்கடைகளில் கீழே சிந்திய பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது! - கூட்டுறவுத் துறை

நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் கீழே சிந்திய பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது

author img

By

Published : Jul 29, 2022, 6:51 PM IST

சென்னை: இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 'நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமானஅரிசியை மட்டுமே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசியப்பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும்.

அரிசியின் தரத்தினை கிடங்குகளில் சரிபார்த்து, தரமான அரிசியை மட்டுமே நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்’ என அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'செம' - வியாபாரிகளுக்கு வாழை இலை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தூத்துக்குடி கலெக்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.