இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை எம்பிக்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மின்கட்டண உயர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து செய்வது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவை வென்ற 130 வயது அமீதா பீக்கு வந்த சோதனை!