ETV Bharat / state

'கல்வி வளர்ச்சியில் 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கும் தமிழ்நாடு.. அதற்குத் தடையான தேசிய கல்விக் கொள்கை வேண்டாம்' - முரசொலி தலையங்கம் - தேசிய அளவில் சராசரி மாணவர் சேர்க்கை

தேசிய அளவில் சராசரி மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 விழுக்காட்டில் இருந்து 2035ஆம் ஆண்டில் 50 விழுக்காடாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், தற்போதே தமிழ்நாட்டில் 51.4 விழுக்காடாக மாணவர் சேர்க்கை உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு ஏற்கெனவே 15 ஆண்டுகள் முன்னேறிச்சென்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு கல்வி, இன்னும் அதிக பாய்ச்சலில் செல்லட்டும். அதற்குத் தடையான தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சியில் 15 ஆண்டு முன்னோக்கி பயணிக்கும் தமிழ்நாடு.. அதற்குத் தடையான தேசியக் கொள்கை வேண்டாம் OR தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக மக்களுக்கு இழைக்கும் தவறு - முரசொலி தலையங்கம்

author img

By

Published : Jun 24, 2022, 3:22 PM IST

சென்னை: சமீப காலமாக தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு கல்லூரி சார்ந்த நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கையை குறித்து தமிழ்நாட்டில் தினந்தோறும் பாடம் நடத்துகிறார் ஆளுநர் என்று தேசிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், " 'ஒன்றியக் கொள்கையைத் தாண்டிவிட்டது தமிழகம்' என்னும் தலைப்பில் முரசொலியில் வந்துள்ள தலையங்கத்தில், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்வித் தடையை ஏற்படுத்தும் ஒரு கொள்கையை ஒன்றிய அரசு வகுத்துள்ளது. அதனை அனைத்து மாநிலங்களையும் நோக்கி திணித்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் அந்தக் கொள்கைக்காகவே தன்னை நியமித்திருப்பதைப் போலத் தினமும் அதைப் பற்றியே பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒன்றிய அரசால் திணிக்கப்படும் புதிய கல்விக்கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளை நாட்டுக்குச் சொல்வதற்கான நல்ல வாய்ப்பை ஒரு வழக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக்கோரி, கடலூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு முன் விசாரணையில் இருக்கிறது. இந்த அமர்வின் முன் தமிழ்நாடு தலைமைச்செயலாளர், உயர் கல்விச்செயலாளர், பள்ளிக்கல்விச்செயலாளர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த பதில் மனு அனைவருக்குமான பதிலாக அமைந்துள்ளது.

கல்வி வளர்ச்சியில் 15 ஆண்டு முன்னோக்கி பயணிக்கும் தமிழ்நாடு.. அதற்கு தடையான தேசியக் கொள்கை வேண்டாம் -  முரசொலி தலையங்கம்
கல்வி வளர்ச்சியில் 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கும் தமிழ்நாடு.. அதற்கு தடையான தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் - முரசொலி தலையங்கம்

தேசிய அளவில் சராசரி மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 விழுக்காட்டில் இருந்து 2035ஆம் ஆண்டில் 50 விழுக்காடாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், தற்போதே தமிழ்நாட்டில் சராசரி மாணவர் சேர்க்கை 51.4 விழுக்காடாக உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்கிறது. மொத்தமுள்ள 38 மாநிலங்களில் 18 மாநிலங்கள் 27.1 என்ற விழுக்காட்டைவிட குறைவாகத்தான் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளது.

சராசரி மதிப்பை விட கூடுதலாகப் பெற்றுள்ள தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழ்நாடு மக்களுக்குத் தவறு இழைப்பதாகவும், எதிர்வினை ஆற்றுவதாகவும் அமைந்து விடும். தேசிய கல்விக் கொள்கையின்படி 5 ஆண்டுகள், பின்னர் மூன்று ஆண்டுகள், அதன் பின்னர் மூன்று ஆண்டுகள், அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் (5+3+3+4) என கல்வி முறை அமல் படுத்தப்பட்டால் ஏற்கனவே உள்ள கல்விமுறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக மக்களுக்கு இழைக்கும் தவறு - முரசொலி தலையங்கம்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக மக்களுக்கு இழைக்கும் தவறு - முரசொலி தலையங்கம்

தேசிய கல்விக்கொள்கையின்படி மூன்று வயதில் சேர வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டால் அதற்கு மேற்பட்ட வயதினர் பள்ளியில் சேரமுடியாத நிலை ஏற்படும். மழலையர் பள்ளி வகுப்புகள் இல்லாமலேயே 5 அல்லது 6 வயதில் பள்ளியில் சேரும் வாய்ப்பு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட மாணவர்களைப்பாதிக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இலவச கல்வி, மதிய உணவு, இலவசப் புத்தகம், இலவச சீருடை, இலவச மிதிவண்டி, இலவசக் காலணி, இலவச லேப்டாப், கல்வி உதவித் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இடைநிற்றல் என்பது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

முரசொலி தலையங்கம்
முரசொலி தலையங்கம்

தமிழ்நாட்டில் தற்போது உள்ள சமச்சீர் கல்வி மூலம் சர்வதேச அளவில் பல வெற்றிகளை மாணவர்கள் காண முடிகிறது. அவர்களது அறிவு, திறமை உள்ளிட்டவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் முடிகிறது. ஆனால், தேசிய கல்விக்கொள்கை மூலம் தொழில்முறை கல்வியை அமல்படுத்தினால் முக்கியப் பாடத்திட்டம் மற்றும் அடிப்படை அறிவு ஆகியவற்றிலுள்ள மாணவர்களின் கவனம் சிதறும்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்விக்கும், உயர்நிலை கல்விக்கும் தனித்தனியாக துறைகள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறோம். அவற்றின் மூலம் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் கண்காணிக்கப்பட்டு அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் தனிக்கவனம் பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் விளக்கமாகச் சொல்லி இருக்கிறது.

இது ஏதோ ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கருத்துகள் அல்ல. உங்களின் தேசிய கல்விக் கொள்கை வருவதற்கு முன்னதாகவே முன்னேறிச்சென்று கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்வதாக இந்த மனு அமைந்துள்ளது. “நாங்கள் மிக உயரத்தில் இருக்கிறோம். அதற்கான கல்விக்கொள்கையாக உங்கள் கல்விக் கொள்கை இல்லை என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறது இந்த மனு“ கல்வி என்பது மாநிலக் கொள்கை சார்ந்தது ஆகும்.

தேசிய கல்விக்கொள்கை என்பது எந்தவிதமான சட்டப்பூர்வமான அங்கீகாரமும் இல்லாத கொள்கை அறிக்கை ஆகும். தமிழ்நாட்டில் அனைத்துத்தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்துச்செல்லக்கூடிய கல்விக் கொள்கையானது இருக்கிறது. இங்கு இருமொழிக்கொள்கை அமலில் இருக்கிறது. இருமொழிகளில் ஒன்று தாய் மொழிக் கல்வி முறை ஆகும்.

கல்வி வளர்ச்சியில் 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கும் தமிழ்நாடு.. அதற்கு தடையான தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் - முரசொலி தலையங்கம்

அந்த வகையில் தாய்மொழிக்கு முழுமையான முக்கியத்துவத்தைத் தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது என்றும் இந்த மனுவில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்று மரபுகள், தற்போதைய சூழல், எதிர்கால விருப்பங்களைக் கருத்தில் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் அறிக்கை தமிழ்நாட்டில் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்த ஆலோசனைகளை விரைவில் வழங்க இருக்கிறது. ஏற்கெனவே 15 ஆண்டுகள் முன்னேறிச்சென்று கொண்டு இருக்கிறது, மாநிலம். தமிழ்நாட்டின் கல்வி, இன்னும் அதிக பாய்ச்சலில் செல்லட்டும். அதற்குத் தடையான தேசிய கல்விக்கொள்கை வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’கொக்கென்று நினைத்தாரோ..?’:தமிழ்நாட்டின் ஆளுநரை விமர்சித்து முரசொலியில் கட்டுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.