ETV Bharat / state

"பிபிசி ஆவணப்பட சர்ச்சை, சேது சமுத்திரத்திட்டம்..." - பட்ஜெட் தொடரில் குரலெழுப்ப திமுக எம்.பி.க்கள் ஆயத்தம்! - முக்கிய பிரச்சினைகளை எழுப்ப திட்டம்

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நாடாளுமன்ற திமுக எம்பிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

che
che
author img

By

Published : Jan 29, 2023, 9:52 PM IST

சென்னை: திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜன.29) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரும் 1ஆம் தேதி நடைபெறவுள்ள மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரில், திமுக சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், குஜராத் வன்முறை குறித்த பிபிசி ஆவணப் பட சர்ச்சை - இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை - இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதேபோல் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு எழுதிய கடிதங்களின் நிலை - நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா - தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் - சிறுபான்மையின மாணவர்களுக்கு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது - மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது - சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது - கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூசிகளைப் பெறுவது - தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது - என்.எல்.சி. நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது - இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டுமென உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:கல்வியும் மருத்துவமும் சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.