சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைக் கடந்த டிச.4ஆம் தேதி புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG) டிச.5ஆம் தேதி ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பாதிப்பு என்பது அதிகமாக இருந்தது. இதில் வெள்ளத்தால் தலைநகர் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
-
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.… pic.twitter.com/ODKjFoulqG
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.… pic.twitter.com/ODKjFoulqG
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 16, 2023தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.… pic.twitter.com/ODKjFoulqG
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 16, 2023
குறிப்பாகப் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என உள்ளிட்ட பலரும் மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.கவின் மாநில மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.
இதையும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் ரோகித் சர்மா! முன்னாள் வீரர் பத்ரிநாத் சூசகம்! என்ன சொன்னார் தெரியுமா?